×

திருவேற்காடு நகராட்சியில் இயற்கை உர விற்பனை மையம் திறப்பு: வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம்

 

பூந்தமல்லி, செப். 4: திருவேற்காடு நகராட்சியில், இயற்கை உர விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் திடக்கழிவிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். தற்போது நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இயற்கை உரங்கள் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் நகரமன்றத் தலைவர் மூர்த்தி ஆலோசனை பேரில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கில், திடக்கழிவு குப்பைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட செழிப்பான இயற்கை உரம் விற்பனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த இயற்கை உர விற்பனை மையத்தை நேற்று முன்தினம் மாலை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா துவக்கி வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் இயற்கை உர விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் ஒரு கிலோ இயற்கை உரம் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளான நேற்று முன் தினம் மட்டுமே 50க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இயற்கை உரங்களை வாங்கி சென்றனர். இதில், தூய்மை அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவேற்காடு நகராட்சியில் இயற்கை உர விற்பனை மையம் திறப்பு: வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Natural Fertilizer Sales Center ,Thiruvekadu Municipality ,Poontamalli ,Tiruvekkadu Municipality ,Dinakaran ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ